இஸ்லாமிய கல்வி நிலையம்.
நிலையத்தின் பிரச்சாரப்பணிகளை இலகுபடுத்துமுகமாக ஆரம்பிக்கப்பட்டதே இஸ்லாமிய கல்வி நிலையம். இது 5 பிரதான பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. அவையாவன,
01. சிறுவர்களுக்கான ஆரம்ப நிலை அல்குர்ஆன் முன்மாதிரி பாடசாலை.
|
02. அனாதைச் சிறார்களுக்கான கல்வி ஊக்குவிப்பு.
|
03. மாணவர்களுக்கான இஸ்லாமிய கற்கை நெறிகளைப் போதித்தல்.
|
04. பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்புக்கள் மற்றும் கற்கை நெறிகளை வழங்குதல்.
|
05. ஆண்களுக்கான தர்பிய்யா மற்றும் மார்க்க விளக்க வகுப்புக்களை நடாத்துதல்.
|
1. சிறுவர்களுக்கான ஆரம்ப நிலை அல்குர்ஆன் முன்மாதிரி பாடசாலை.
2005ம் ஆண்டு சுமார் 30 சிறுவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் அல்குர்ஆன் முன்மாதிரிப் பாடசாலை இன்றுவரை மிகவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. நவீன கற்பித்தல் முறையினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூன்று வருட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இங்கு கல்வி போதிக்கப்படுகின்றன. இங்கு கல்வி கற்ற சில மாணவர்கள் அறபுக் கல்லூரிகளில் தங்கள் கல்வியைத் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலங்களில் போதிய அடிப்படை வசதிகளின்றி ஆரம்பிக்கப்பட்ட இம்மத்ரஸாவில் பள்ளிவாயல் இமாமாக அப்போது கடைமையாற்றிய ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம். ஸபீர் (அமீனி) அவர்கள் இவ் மத்ரஸாவின் ஆரம்பம் காலம் முதல் நீண்ட நாட்கள் மிகவும் தியாக சிந்தையுடன் பணியாற்றி வந்தார்கள் என்பது இங்கு நன்றியுணர்வுடன் நினைவு கூறத்தக்கது.
2. அனாதைச் சிறார்களுக்கான கல்வி ஊக்குவிப்பு.
2004ம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் 23 தந்தையை இழந்த அனாதைச் சிறார்களைக் கொண்டு இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. தந்தை மரணித்தபின் தாயின் பராமரிப்பில் அல்லது பாதுகாவளரின் பொறுப்பில் வளர்ந்து வரும் இவர்கள் சாதாரண காரணங்களுக்காக தங்களது கல்வியைத் தொடர முடியாமல் இடை நடுவில் நிறுத்தப்பட்டு விடுகின்றனர். இவ்வாறான சிறார்களை சமூகத்தில் இனங்கண்டு அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதினூடாக அவர்களது கல்வியைத் தொடர ஊக்குவிப்பது இந்நிதியத்தின் பிரதான நோக்கமாகும். ஜம்இய்யது தாறுல் பிர் அமைப்பினூடாக இச்சிறார்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 104 சிறுவர்கள் இதனூடாக பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
3. மாணவர்களுக்கான இஸ்லாமிய கற்கை நெறிகளைப் போதித்தல்.
மாணவர்கள் சமூகத்தின் எதிர்காலத் தலைவர்கள். எனவே மார்க்கத்தின் பெயரால் அவர்கள் சிறந்த முறையில் வழி நடாத்தப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கில் இவர்களுக்கான வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. தௌஹீதின் யதார்த்தத்தை உரிய முறையில் அவர்களுக்கு போதிப்பதினூடாகவும் மார்க்கம் விதியாக்கியுள்ள அடிப்படைக் கடமைகளை சீராக நிறைவேற்றுவதற்கான பயிற்சிகளை வழங்குவதினூடாக அவர்களை சிறந்த கொள்கைவாதிகளாக திகழ்ந்திடச் செய்ய முடியும். அதனடிப்படையில் இவர்களுக்கான தர்பிய்யா (ஆன்மீக) வகுப்புக்கள், அல்குர்ஆன் பயிற்ச்சி வகுப்பு, ஹதீஸ் விளக்கவுரை போன்றவை நடைபெற்று வருகின்றன.
4. பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்புக்கள் மற்றும் கற்கை நெறிகளை வழங்குதல்.
பெண்களுக்கு மத்தியில் தஃவாப் பணிகளை முன்னெடுப்பதற்காக ஜம்இய்யதுந் நிஸா எனும் பெண்கள் தஃவாப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதனூடாக கீழ்க்கானும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
01.அல்குல்ஆனை ஓதத் தெரியாத பெண்களுக்கு அதற்கான பயிற்ச்சி வகுப்புக்களை நடாத்துதல். |
02. அல்-குர்ஆன் தப்ஸீர் வகுப்புக்கள் மற்றும் ஹதீஸ் விளக்க வகுப்புக்களை நடாத்துதல். |
03. பயான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்துதல். |
04. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தம்மால் ஆன உதவிகளை வழங்குதல் |
05. பெண் ஜனாஸாக்களை குளிப்பாட்டுவதற்கான பயிற்ச்சி வகுப்புக்களை நடாத்துதல்.
|
06. அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழிமுறைக்கு அமைய பெண் ஜனாஸாக்களை குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதல். |
07. கல்விச் சுற்றுலா மற்றும் ஒன்று கூடல்களை ஏற்படுத்துதல். |
08. சிறுவர்களுக்கான அரம்ப நிலை அல்குர்ஆன் முன்மாதிரி பாடசாலையை மேற்பார்வை செய்து ஆலோசனைகளை வழங்குதல் |
இவ்வாறான பல்வேறு முன்னெடுப்புக்கள் இதனூடாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
|
5. ஆண்களுக்கான தர்பிய்யா மற்றும் மார்க்க விளக்க வகுப்புக்களை நடாத்துதல்.
ஆண்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் இதனூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. |
01. அல்குல்ஆனை ஓதத் தெரியாத ஆண்களுக்கு அதற்கான பயிற்ச்சி வகுப்புக்களை நடாத்துதல். |
02. வாராந்த பயான் நிகழ்ச்சிகளை நடாத்துதல். |
03. மாதாந்த தர்பிய்யா (ஆன்மீக) பயிற்ச்சி வகுப்புக்களை நடாத்துதல். |
04. அல்-குர்ஆன் தப்ஸீர் வகுப்புக்கள் மற்றும் ஹதீஸ் விளக்க வகுப்புக்களை நடாத்துதல் |
05. அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழிமுறைக்கு அமைய ஆண் ஜனாஸாக்களை குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதல். |
06. கல்விச் சுற்றுலா மற்றும் ஒன்று கூடல்களை ஏற்படுத்துதல். |
இவ்வாறாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதனூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
|