அறிமுகம்
இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான அத்வைதத் தத்துவத்தின் தாக்கத்திற்கும் கப்ரு வணக்கம் மற்றும் ஸுஃபித்துவச் சிந்தனைகளுக்கு மக்கள் அடிமைப்பட்டு வழிகெட்ட ஞானவான்களிடமும், சேகுமார்களிடமும் தங்களது பெறுமதிமிக்க ஈமானைப் பறிகெடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு போதிப்பதற்காக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் உதயமானதே காத்தான்குடி இஸ்லாமிய நிலையம்.
ஆரம்ப காலகட்டத்தில் மக்களுக்கு தௌஹீத் பற்றிய தெளிவை எடுத்துச் செல்வதற்காக பல்வேறு தலைப்புக்களில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. மக்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஷ]ர்க் மற்றும் பித்அத்துகளுக்கு எதிராகவே அனைத்துப் பிரசுரங்களும் தொகுக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு சமூக சேவைகளும் மேற்கொள்ளப்பட்டன. பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களுக்கு சிபாரிசு செய்து உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், தனி நபர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவை வழங்குதல், தௌஹீதின் வளர்ச்சிப்பணிக்காக சக தஃவா அமைப்புக்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுதல், இஸ்லாமிய கொள்கை விளக்க நூற்களை வெளியிடல், கல்விக் கருத்தரங்குகளை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை இந்நிலையம் தொடராக மேற்கொண்டு வந்துள்ளது.
2000ம் ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் முன் பகிரங்கமாக அறிமுகமான இந்நிலையம் தனக்கென ஓர் நூலகத்தை நிறுவியதுடன் மக்கள் அபிமானத்தைப் பெறத் தொடங்கியது. தௌஹீத் கொள்கையை பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவையும் இப்பகுதியில்தான் ஏற்பட்டது எனலாம். முதிர்ச்சிமிக்க பல்வேறு சகோதரர்களின் துணை கொண்டு பல மாநாடுகளை ஏற்பாடு செய்து நடாத்தியதுடன் பல பெறுமதிமிக்க நூற்களும் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தௌஹீத் ஏழுச்சி இன்றுவரை காத்தான்குடியையும் அதனை அன்மித்துள்ள பகுதிகளிலும் வியாபித்து நிற்கின்றது.
இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நேக்கத்திலிருந்து சிறுதளவும் தளர்ந்துவிடாமல் தமது பணியினை இன்றுவைர முன்னெடுத்து வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.
|