காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் 14.07.2006ல் நடைபெற்ற இஸ்லாமிய கொள்கை விளக்க மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்.
01. எங்களது இஸ்லாமியப் பிரச்சாரப் பணியின் அடிப்படையாக அல்குர்ஆன், அல்ஹதீஸ் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். எப்பிரச்சினை வந்தாலும் இன்ஷh அல்லாஹ் அதன் மூலமே தீர்வுகாண முயற்ச்சி செய்வோம். இதில் தவறு காணும் எவரும் எந்நேரத்திலும் ஆதாரங்களின் அடிப்படையில் சுட்டிக்காட்டினால் எமது தவறை ஏற்றுக்கொள்ள பின்நிற்க மாட்டோம். தூய இஸ்லாத்தை இப்பிரதேசத்தில் பரப்ப இன்ஷh அல்லாஹ் எத்தியாகம் செய்தேனும் முயற்ச்சி செய்வோம். இதற்காக முயற்ச்சி செய்யும் எவருக்கும் உதவியாக செயற்படுவோம். இதன் மூலம் சமூகத்தைக் கூறு போடுவதோ, அடாவடித்தனத்தில் ஈடுபடுவதோ எமது நோக்கமல்ல.
02. எமது நிலையத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட 'மாபெரும் பரிசுத்திட்டம் ரூபாய் 5 மில்லியன்' எனும் பகிரங்கப் பிரசுரத்தின் அடிப்படையில், அதன் விதிமுறைகளுக்கு அமைவாக அதில் கூறப்பட்ட விடயங்களை அல்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்களின் ஆதாரங்களுடன் நிரூபிக்கும் ஆற்றல் மிக்கவர்களை பகிரங்கமாக இங்கு அழைக்கின்றோம்.
03. இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் மாத்திரமே எமது சொத்துப் பங்கீடுகளை மேற்கொள்வோம் என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம்.


04. பெண் வீட்டாரிடமிருந்து சீதனமாக வீடு, காணி, நகை, பணம், சொத்துக்கள் பெறப்பட்டு நடைபெறும் திருமணச் சடங்குகளில் எக்காரணம் கொண்டும் கலந்து கொள்ளமாட்டோம். அத்தோடு அறியாக் காலத்தில் சீதனம் பெற்று திருமணம் முடித்த எம்முடன் உள்ள சில சகோதரர்கள் அவற்றை உரியவர்களிடம் விரைவாக திருப்பிக் கொடுக்க அல்லாஹ்வின் மீது ஆணையாக முயற்ச்சி செய்வோம்.

05. பீடி, சிகரட், வெற்றிலை, புகையிலை தொடக்கம் அனைத்துவகையான போதைப் பொருட்கள் பாவிப்பதிலிருந்தும், விற்பனை செய்வதிலிருந்தும் அல்லாஹ்வின் மீது ஆணையாக முற்றாக விலகிக் கொள்கின்றோம்.


06. வட்டியோடு தொடர்பான கொடுக்கல் வாங்கல், வியாபாரம், அடகு வைத்தல் போன்ற அனைத்திலிருந்தும் முழுமையாக ஒதுங்கிக் கொள்கின்றோம்.